மக்களோட மன நிலைமை இன்னும் 2000 இருந்த மாதிரியே இருக்கு , 58 ல retirement ., 60- 65 ( Life Expectancy ) இந்த 25 வருசத்துல நிறைய மாறிடுச்சு, தமிழ் நாட்ல 2025 Average life expectancy 75.. இதுவே சிறு நகரங்கள்ல இல்லை கிராமங்கள்ல வாழ்த்தா 80 தொடுவது இப்பவே சத்தியம்தான் ., இன்னும் 10 -20 வருஷம் medical / pharma வளர்ற வேகத்துல , நம்ம தலைமுறை Life Expectancy 100 தொடுற்றது மிக சாத்தியம் , இனிமே 60 ஆனா கிழவன் இல்லை 80க்கு மேல தான் கிழவன் .. 40 mid age இல்லை 60 தான் midage .. { உணவு , ஆரோக்கியம் சரியாக இருந்தால் }
போன தலைமுறை வேற., அடுத்த 20 வருஷம் கழிச்சு retirement என்பது சென்ற தலைமுறை போல் இருக்காது , வரைந்து வரும் பொருளாதார மாற்றத்துல பிள்ளைகள் எந்த ஊர்ல நாட்ல இருப்பாங்க ன்னு கூட தெரியாது ., பிள்ளைகள் கூட இருப்பது எல்லாம் இனி நடக்காத காரியம் , அவங்களும் கூட வெச்சு இருக்க மாட்டாங்க ., நான் என் அப்பாவை பார்த்துக்கிட்டேன் என் புள்ளை என்னை பார்த்ததுக்குவான் எண்ணம் எல்லாம் இருந்தால் இப்போவே அதை மறப்பது நல்லது .. குறை சொல்ல இல்லை அவங்க வாழ்க்கை முறையை டெக்னாலஜி அதற்குண்டான வளர்ச்சி முன்னேற்றம் என அப்படி மாத்தி இருக்கும் ( Your Children Are Not Your Retirement Investments )
இப்போவே கிராமங்கள் எல்லாம் retirement home மாதிரி தான் இருக்கு ., படிச்சவன் யாரும் இங்க இல்லை ., வருஷம் ஒன்னு ரெண்டு தடவை வந்து போவதோடு சரி ., இந்த போக்கு இன்னும் 10-20 வருஷத்துல உச்சத்தை தொடும் ., சிட்டி லைப்ல முக்கால் வாசி பேரு இருப்பாங்க , இப்போ இருக்குற வருசத்துக்கு 3/4 விசிட் கூட எல்லாம் காணாம போகிடும் ..2000 இல் இருந்து வளர்ந்த வருச டெக்னாலஜி வளர்ச்சி நம்மல இந்த இடத்தில நிறுத்தி இருக்கு ., இப்போ retirement ல இருக்கிறவங்களுக்கு கூட இருந்து பார்க்க முடியலனாலும் அடுத்த தலைமுறை பொருளாதார உதவியாவது செய்றாங்க ., பொருளாதார மாற்றத்தில் இன்னும் 20 வருசத்துல அவங்கள காப்பாத்திக்கவே பெரும் பாடாக இருக்கும் வாழ்க்கை முறைல ., பொருளாதார உதவி எல்லாம் எதிர்பார்க்கவே முடியாது
Life Expectancy அதிகமாகி மனிதனுடைய வாழும் ஆண்டுகள் கூடும் பொழுது , உழைக்கும் ஆண்டுகளும் , பொருளாதார தேவைகளும் கூடுகிறது ., ஆக சின்னதாகவோ பெருசாவோ Corpus இப்போ இருந்தே ஆரம்பிச்சுக்கோங்க .. Retirement life வெறும் பணத்தோட இருக்குறது மட்டும் இல்லை , மெடிக்கல் செலவுகள் என பல விஷயம் இருக்கு ., அந்த சமயத்தில் காசு இல்லாம இருக்குறது , இல்லை கம்மியா காசு வெச்சு இருக்குறது., எல்லாம் கொடுமையான கஷ்டங்களை கொடுக்கும் விஷயங்கள் .. modern science மருத்துவத்தை குடுக்கும் , இலவசமா இல்லை ., அடுத்த சில வருடம்களில் மருத்துவம் பயங்கர costly யான துறையா உருவெடுக்கும் ( இப்பவே அப்படி தான் இருக்கு அது வேற விஷயம் )
அறிவியல் உதவியால் போன தலைமுறையை விட அதிக ஆண்டுகள் நாம வாழப்போவது உறுதி ., கடந்த காலத்தை மனசில் வைத்து கொண்டு எந்த பொருளாதார திட்டமிடலும் இல்லாமல் இருந்தால் , நவீன அறிவியல் குடுக்கும் வாழ்வின் போனஸ் ஆண்டுகள் , நரகமாக மாறிவிடும் .. plan Your Finances carefully
